நிதியமைச்சர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை.! - Seithipunal
Seithipunal


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கர்நாடகா மாநிலம் பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய உத்தரவிட்டது. அதன் படி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டது. 

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஜே.பி.நட்டா, கர்நாடக முன்னாள் பாஜக தலைவர் நளின் குமார். கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக முன்னாள் பாஜக தலைவர் நளின் குமார் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தப்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பாஜக தலைவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு அக்டோபர் 22 ஆம் ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Interim ban of hearing nirmala seetharaman case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->