டெல்லியில் ரேபிடோ, பைக் டாக்சிக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ரேபிடோ, பைக் டாக்சிக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம்.!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் ரேபிடோ, உபேர் பைக் டாக்சி உள்ளிட்டவை இயங்குவதற்குத் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்றம் டெல்லி அரசின் சார்பில் புதிய கொள்கை வகுக்கும் வரை ரேபிடோ, உபேர் பைக் டாக்சி இயங்க தடை விதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. 

இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதிகள் அனிருதா போஸ், ராஜேஷ் பிந்தல் உள்ளிட்டோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு நேற்று விசாரணை செய்தது.

அப்போது, அரசின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாது என்று டெல்லி அரசின் சார்பில் மூத்த வக்கீல் மணீஷ் வஷிஷ் வாதிட்டார். 

அதேபோல், உபேர் நிறுவனத்தின் சார்பில் மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கி இருக்கக்கூடிய சூழலில் டெல்லி அரசு இன்னும் அதை உருவாக்கவில்லை என்று மூத்த வக்கீல் நீரஜ் கிஷன் கவுல் வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், அரசின் உரிமம் இல்லாமல் சாலையில் வாகனங்கள் இயங்க முடியாது என்று கருத்து தெரிவித்ததுடன், டெல்லியில் ரேபிடோ, உபேர் பைக் டாக்சி இயங்க இடைக்கால தடை விதித்தது. 

மேலும், இவற்றை இயங்க அனுமதித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி அரசின் கொள்கை திட்டம் ஜூலைக்குள் தயாராகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

interim ban on rapido in delhi supreme court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->