குறித்த நேரத்தில் சம்பவம் இருக்கு.. சந்திராயன்-3 திட்டமிட்டபடி தரையிறங்கும்.!! இஸ்ரோ உறுதி.!!
ISRO announced Chandrayaan3 will land on moon as planned
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன்-3 விண்கலத்தை அனுப்பி இருந்தது. கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் மாலை 5:45 மணிக்கு நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று நிலவில் தரையிறக்கும் நேரத்தை இஸ்ரோ மாற்றி அமைத்தது. அதன்படி நாளை மாலை 5:45 மணிக்கு பதிலாக 6:04 மணி அளவில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டது.
மேலும் சாதகமான சூழல் இல்லாவிட்டால் விக்ரம் லேண்டர் தரையிறங்குவது காலதாமதம் ஆகலாம். நாளை சாதகமான சூழ்நிலை இல்லாவிடில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படும் என இஸ்ரோ நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது திட்டமிட்டபடி நாளை மாலை 6:04 மணிக்கு நிலவின் தென்பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் சுற்று வட்ட பாதையில் 25 கிலோ மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டன் சுற்றிவரும் நிலையில் அதன் செயல்பாடு திருப்திகரமாகவும் சீராகவும் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவில் தலையிறங்க இன்னும் 30 மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள இந்த செய்தி அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திட்டமிட்டபடி பணிகள் சீராக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரின் திசைவேகம் மற்றும் அதன் இயக்கம் மிகவும் துல்லியமாக இருப்பதாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் திட்டத்தின் படியே அதன் செயல்பாடு இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நாளைமாலை 6:04 மணி என்ற தரையிறங்கும் நேரம் தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை இஸ்ரோ தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளத்தாக்குகளும் மலைகளும் தெள்ளத்தெளிவாக தெரியும் படி விக்ரம் லேண்டர் படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியதை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ISRO announced Chandrayaan3 will land on moon as planned