திடீர் டுவிஸ்ட்.! விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நேரத்தில் மாற்றம்.!! இஸ்ரோவின் லேட்டஸ்ட் அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன்-3 விண்கலத்தை அனுப்பி இருந்தது. கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் மாலை 5:45 மணிக்கு நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது நிலவில் தரையிறக்கும் நேரத்தை இஸ்ரோ மாற்றி அமைத்துள்ளது. மாலை 5:45 மணிக்கு பதிலாக 6:04 மணி அளவில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சாதகமான சூழல் இல்லாவிட்டால் லேண்டர் தர இயக்குவது காலதாமதம் ஆகலாம். நாளை மறுநாள் சாதகமான சூழ்நிலை இல்லாமல் போனால் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

அதே சமயத்தில் சந்திராயன்-3 விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காண இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் இஸ்ரோவின் யூ டியூப், பேஸ்புக், டிடி பொதிகை டிவியிலும் நேரலையில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO announced Vikram Lander landing time was changed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->