நிலவின் ரகசியங்களை ஆராயும் பிரக்யான்.!! இஸ்ரோ வெளியிட்ட வீடியோ வைரல்.!!
ISRO has released Pragyan rover crawling video on moon
பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் ரகசியங்களைத் தேடுவதற்காக சிவசக்தியை சுற்றி சுற்றி வருகிறது.!!
நிலவில் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து சாய்வு தளம் வழியாக நிலவில் இறங்கிய பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பணியினை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
விக்ரம் லேண்டரில் இருந்து தரையிறங்கியதும் ரோவர் தனது சோலார் மின் தகடுகளை திருப்பி உள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில் தற்போது தேவையான மின்சார சக்தியை உற்பத்தி செய்த பிறகு தனது ஆராய்ச்சி பணியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
விக்ரம் டேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிவசக்தி என இன்று காலை பெயர் சூட்டிய நிலையில் அதனை குறிப்பிட்டு இஸ்ரோ தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "பிரக்யான் ரோவர் தென் துருவத்தில் சந்திர ரகசியங்களைத் தேடுவதற்காக சிவசக்தி முனையைச் சுற்றி சுற்றி வருகிறது 🌗!" என பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
ISRO has released Pragyan rover crawling video on moon