இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் - மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை.!
isro launch bslvc60 rocket today
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.
இன்று விண்ணில் பறக்க இருக்கும் இந்த ராக்கெட் , ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என்று தலா 220 கிலோ எடை கொண்ட இரண்டு சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இந்த இரண்டு செயற்கைகோள்களும் பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்று வட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்படுகின்றன.
இஸ்ரோ சார்பில் இந்த ஆண்டிற்கான இறுதி திட்டத்தின்படி, பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று ஏவப்பட உள்ள நிலையில், தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதாவது, "திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி மீனவர்கள், ராக்கெட் ஏவுதலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
isro launch bslvc60 rocket today