26ஆம் தேதி விண்ணில் பாய்கிறது... இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட்.! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அதிக எடை கொண்ட எல்.வி.எம்-3 ராக்கெட்டை வரும் 26-ந்தேதி காலை 9 மணிக்கு ஆந்திரமாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் வணிக ரீதியாக ஒரே நேரத்தில் அதிக செயற்கைக்கோளை விண்ணில் ஏவப்படுவது, இது 2வது முறையாகும். இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்பொழுது, இந்த எல்.வி.எம்-3 ராக்கெட் 5.8 டன் எடையுடன் 36 செயற்கைக்கோள்களை உள்ளடக்கியுள்ளது.

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் வீனஸ் கோளின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் வளிமண்டலத்தை ஆராய்வதற்கும், வீனஸ் கோளில் எரிமலைகளின் செயல்பாடு குறித்து கண்காணிப்பதற்கும் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதன் மூலம் இந்தியாவின் விண்வெளி நிறுவனத்தின் பன்முகத்தன்மை விரிவடையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 36 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO LVM 3 rocket to be launched on march 26th


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->