ஹைதராபாத்தில் பரபரப்பு! சம்பளம் தராத ஐடி நிறுவன முதலாளி! திட்டம்போட்டு கடத்திய ஊழியர்கள்!
IT company boss who doesn pay salary Planned and kidnapped employees
ஹைதராபாத்தில் சம்பளம் தராத ஐடி நிறுவன முதலாளியை ஊழியர்கள் கடத்திவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இயங்கி வரும் ஐ டி நிறுவனமான கிக்ளீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரா ரெட்டி. இவர் கடந்த ஜூலை 10ஆம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நடு இரவில் ரவிச்சந்திரா வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது தாயாரை தாக்கி விட்டு பின்னர் ரவிச்சந்திராவை அந்த கும்பல் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்த 83 மடிக்கணினிகளையும் அந்த மர்ம கும்பல் திருடி சென்று உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ரவிச்சந்திராவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ரவிச்சந்திராவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு போலீசார் ரவிச்சந்திரா சைலம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் கண்டுபிடித்து மீட்டனர்.
நிதி சிக்கல் காரணமாக அவரது கிக்ளிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் 1200 உயிர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சில ஊழியர்கள்தான் ரவிச்சந்திராவை திட்டம் போட்டு கடத்தியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை 8 பேரை கைது செய்துள்ளனர். அதில் 5 பேர் ரவிச்சந்திராவின் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். அவர்களிடமிருந்து 84 மடிக்கணினிகள், 6 சொகுசு கார்கள், 5 தொலைபேசிகள் மற்றும் 3 பாஸ்போர்ட்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
English Summary
IT company boss who doesn pay salary Planned and kidnapped employees