"உலக அளவில் நேசிக்கப்படும் மோடி." இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வெளிப்படை பேச்சு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி உலக அளவில் அனைத்து தலைவர்களாலும் நேசிக்கப்படும் நபராக இருக்கிறார் என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். 

மார்ச் இரண்டாம் தேதி ஆன இன்று காலை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்தியா வந்தடைந்தார். அவருடன் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தாஜானியும், மேலும் சில அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ரெய்சினா பேச்சு வார்த்தையில் பிரதமர் மோடி மாநாட்டை துவங்கி வைத்து பேசினார்.

இந்த நிகழ்விற்கு முன்பாக இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேசிக் கொண்டனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் பேசிய இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, " இந்திய பிரதமர் மோடி உலக அளவில் பல தலைவர்களால் நேசிக்கப்படும் மனிதராக இருக்கிறார்.

ஒரு மிகப்பெரிய தலைவராக அவர் விளங்குகிறார் என்பது உண்மையில் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றது. உக்ரைன் ரஷ்யா போர் பேச்சு வார்த்தையை எளிமையாக முடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று நினைக்கிறோம். இத்தாலி மற்றும் இந்திய நாட்டிற்கு இடையேயான உறவை பலப்படுத்துவது தான் எங்கள் நோக்கம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Italy Pm About Narendra Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->