மும்பை தாக்குதல்: திட்டமிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - ஜெய்சங்கர் - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலால் மும்பை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே அதிர்ந்தது.

மேலும் இந்த பயங்கர தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினத்தில் அதில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வதில் உலக நாடுகள் இந்தியாவுடன் இன்று இணைந்துள்ளன. 

மேலும் பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த பயங்கரவாத செயல்களை திட்டமிட்டவர்கள் மற்றும் தாக்குதலை மேற்பார்வை செய்தவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்திற்கு இலக்காகி பாதிக்கப்பட்ட உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கைம்மாறாக இதை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaishankar says Planners of Mumbai attacks must be brought to justice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->