300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: பரிதாபமாக உயிரிழந்த பயணிகள்!  - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர், படோடே- கிஷ்ட்வார் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கி இருந்தவர்கள் மீட்டு வருகின்றனர். 

இந்த விபத்தினால் 36 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய அமைச்சர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கொண்டு செல்ல ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், காயமடைந்தவர்களின் தேவைக்கேற்ப மாவட்ட மருத்துவமனை மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் எக்ஸ் தளத்தில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.

அதன்படி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu and Kashmir bus overturned 300 foot ravine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->