ஜம்மு காஷ்மீர் பயங்கர சண்டை.. 3 வீரர்கள் வீர மரணம்!
Jammu and Kashmir is a fierce battle. Three soldiers killed
ஜம்முகாஷ்மீரில்நடந்த என்கவுண்டரில்3பயங்கரவாதிகள்சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த சண்டையில் 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைத்துள்ளது ஜம்மு காஷ்மீர் மாநிலம். இந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி நாசவேலைகளை முயற்சி செய்துவருகின்றனர்.அப்படி நாசவேலை செய்ய இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகளை எல்லை பாதுகாப்புப் படைவீரர்கள் தடுத்து நிறுத்தி வருகிறார்கள் அவர்களை அழித்துவருகின்றனர்.சமீபகாலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துவந்தாலும் அதனை நமது எல்லை பாதுகாப்புப் படைவீரர்கள் தடுத்துவருகின்றனர்.
இந்தநிலையில் கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் 5 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த பயங்கர சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதில் காயமடைந்த 5 வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கதுவா என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் பாதுகாப்புப் படைவீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Jammu and Kashmir is a fierce battle. Three soldiers killed