ஜம்மு காஷ்மீர் பள்ளிகளுக்கு பறந்த திடீர் சுற்றறிக்கை! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal



ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை இந்திய தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக வேண்டும் என பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய 16 நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு கூட்டம் நடத்த வேண்டும். 

இது மாணவர்கள் இடையே ஒற்றுமை மற்றும் ஒழுக்க உணர்வை கொண்டு வர உதவும். பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களை வரவழைத்து சுற்றுச்சூழல் போதை பொருள் அச்சுறுத்தல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu and Kashmir schools make national anthem compulsory


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->