ஜார்கண்ட் : முன்னாள் முதல்வர் சிபு சோரன் திடீரென மருத்துவமனையில் அணுமதி.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டில் பத்து நாட்களும், அதன் பின்னர் 2008-2009 மற்றும் 2009-2010 ஆண்டிலும் என்று மொத்தம் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் சிபு சோரன். 

ராஜ்யசபை எம்.பியாக இருந்த அவர், மத்திய நிலக்கரி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இதையடுத்து அவர் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் குற்றச்சாட்டில், சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில், சிபு சோரன் உடல்நலக்குறைவு காரணமாக, ராஞ்சி நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கு அவருக்கு தொடர்ந்து பரிசோதனை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தற்போதைய முதல் அமைச்சராக முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சரான சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jarkant state ex chief minister shibu soren admitted in hospital for health issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->