காற்று நிரப்பிய போது ஏற்பட்ட விபரிதம்.. ஜேசிபி டயர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மாவட்டத்திலுள்ள சில்தாரா தொழிற்சாலையின் வாகன பணிமனையில் கடந்த 3ஆம் தேதி அன்று ஜேசிபி வாகனத்தின் டயர் காற்று நிரப்பபட்டது. அப்போது திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இந்த எதிர்பாராத விபத்தில் அங்கிருந்த 2 தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்த வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் தொழிலாளி ஒருவர் பெரிய டயரில் காற்று நிரப்புவது போலவும், மற்றொரு நபர் காற்றின் அளவை சரிபார்க்க டயரை அழுத்துவது போலவும் இருந்த நிலையில், திடீரென டயர் வெடித்து இருவரும் தூக்கி வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இறந்த தொழிலாளர்கள் இருவரும் மத்திய பிரதேசம் ரேவா மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என்றும் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JCB tyre blast 2 members death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->