இந்திய மாமியாருடன்.. ஜெர்மன் மருமகள் நெகிழ்ச்சி செயல்.. வைரலாகும் புகைப்படங்கள்.!
Jerman Womsn with Her indian mother In law
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தனது மாமியாருடன் சேர்ந்து வயல்வெளியில் வெங்காயம் நடுகின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீப காலமாகவே இந்திய பெண்கள் மற்றும் ஆண்களை வெளிநாட்டவர்கள் திருமணம் செய்து கொள்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் ஜூலி சர்மா என்ற பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது மாமியாருடன் சேர்ந்து வெங்காயம் புதைத்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோவை அவரது கணவர் எடுக்கிறார். அப்பொழுது அந்த கணவர் உன்னிடம் ஒன்று கேட்கலாமா என மனைவியை பார்த்து கேட்கிறார். "நீ எங்கிருந்து வருகிறாய்? என்ன செய்கிறாய்?" என்று கேட்கிறார்.
அதற்கு அந்த பெண், "நான் ஜெர்மனியில் இருந்து வருகிறேன. மாமியாருடன் சேர்ந்து வெங்காயம் நடவு செய்கிறேன்." என்று அந்த பெண் கூறுகிறார். வெளிநாட்டைச் சேர்ந்த பெண் இந்திய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சேர்ந்து இருப்பது தற்போது பலரிடமும் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
English Summary
Jerman Womsn with Her indian mother In law