அதிரடி சோதனை! வசமாக சிக்கிய மாநகராட்சி அதிகாரி! சிக்கிய ரூ.6 கோடி..மாமியார் பேரில் 1 கோடி! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் மாநகராட்சி அதிகாரி வீட்டில் ரூபாய் 6 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாநகராட்சி கண்காணிப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரியாக இருப்பவர் தசாரி நாகேந்திரன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலை அடிப்படையாகக் கொண்டு நேற்று முன் தினம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நாகேந்திரன் வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். 

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வீடு முழுவதும் தீவிரமாக சோதனை செய்ததில் படுகைக்கு அடியில் இருந்த பெட்டியில் ரூ. 2.93 கோடி ரொக்கமும் ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் மனைவி தாயார் பெயரில்  ரூ. 1.10 கோடி  வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மாநகராட்சி அதிகாரி ரூ.1.98 கோடி மதிப்புள்ள 17 அசையா சொத்துக்கள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரி தசாரி நாகேந்திரன் வீட்டில் மொத்தம் ஆறு கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jewelery and cash worth Rs 6 Crore seized from Corporation Officer house in Telangana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->