வேலை வாய்ப்புக் கண்காட்சி : 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதம்.!
Job fair seventy one thousand peoples appointed
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளையும் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, அவர் கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
இந்நிலையில்,இன்று மத்திய அரசின் "ரோஜ்கார் மேளா" அல்லது "வேலைவாய்ப்பு கண்காட்சி" நடைபெறுகிறது. அந்தக் கண்காட்சியில், சுமார் 71 ஆயிரம் பேருக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கி, அவர்களுடன் உரையாற்றுகிறார்.
இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்கள், நாடு முழுவதும் 45 இடங்களில் நேரடியாக வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த நிகழ்ச்சி இந்தியாவில் சட்டசபை தேர்தல் நடக்கும் குஜராத் மற்றும் இமாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் நடைபெறாது.
நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டையும், வேலை வாய்ப்புகளை உரியுவாகுவதற்கு ஒரு தூண்டுகோலாகவும் இந்த நிகழ்ச்சி உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இணையவழி புத்தாக்க பயிற்சி திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.
English Summary
Job fair seventy one thousand peoples appointed