20 ஆயிரம் மத்திய அரசு பணிக்கான தேர்வில் இந்தி திணிப்பு! மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசுத் துறைகளில் உயர் பணியிடங்களுக்கான தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் தேசிய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த தேர்வு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அருண் ஜவ்கல் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் "மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 20 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வானது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த உள்ளது. தயவுசெய்து இந்தி அல்லாத பிற மொழிகளிலும் நடத்த மத்திய அரசை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என பல்வேறு தலைவர்களை குறிப்பிட்டு பதிவு போட்டிருந்தார். 

அவருடைய ட்விட்டிருக்கு பதில் அளித்திருந்த திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி "பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை" என மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jobs in union govt departments Exams are conducted only in Hindiand english


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->