பட்ட பகலில் பத்திரிகை நிருபர் சுட்டுக்கொலை; உ.பி-இல் பதற்றம் ..!
Journalist shot dead in broad daylight in UP
உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகை நிருபர் ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகை நிருபரான ராகவேந்திரா பாஜ்பாய், சிதபூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரது பைக் மீது மோதி முதலில் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பைக்கில் இருந்து கீழே விழுந்த நிருபர் பாஜ்பாயை மர்ம நபர் துப்பாக்கியால் இருமுறை சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார். துப்பாக்கி குண்டு நெஞ்சு மற்று தோள்பட்டை பகுதியை துளைத்த நிலையில், அவர் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பாஜ்பாயின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராகவேந்திரா பாஜ்பாய்க்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Journalist shot dead in broad daylight in UP