ஜூனியரை வாதாட அனுப்பிய வழக்கறிஞர் - கொந்தளிப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.!
justice fined to lawyer sending junior lawyer to high court
ஜூனியரை வாதாட அனுப்பிய வழக்கறிஞர் - கொந்தளிப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.!
உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. அப்போது, அந்த வழக்கில் ஆஜராக வேண்டிய வக்கீல் அங்கு வராமல், அவருக்கு பதிலாக ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார்.
அதன் படி ஆஜரான அந்த ஜூனியர், முதன்மை வழக்கறிஞர் இல்லாததால் விசாரணையை ஒத்திவைக்கும்படி நீதிபதிகளிடம் கோரினார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு வாதத்தை துவக்கும்படி அந்த ஜூனியருக்கு உத்தரவிட்டனர்.
அதற்கு அந்த ஜூனியர் வழக்கு குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை உடனே ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் வீடியோ கால் வாயிலாக ஆஜராகி
நேரில் வராததற்கு மன்னிப்பு கோரினார். அப்போது, அவரிடம் நீதிபதிகள், தகுந்த முன்னேற்பாடு மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஜூனியர் வழக்கறிஞரை அனுப்பி வைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், உரிய முறையில் நடந்துகொள்ள தவறியதால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் 2,000 ரூபாயை செலுத்தி அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த உத்தரவு பிறப்பித்தனர்.
English Summary
justice fined to lawyer sending junior lawyer to high court