90ஸ் கிட்ஸ்களின் வயிற்றெரிச்சலில் எது நிலைத்து உள்ளது! கல்யாணின் கல்யாண வாழ்க்கை ஒரு வாரத்தில் கலவரம் ஆனது! - Seithipunal
Seithipunal


மனைவிகளின் தொல்லை தாங்காமல் தலைமறைவான டிக் டாக் பிரபலம்!

கடந்த ஒரு வாரமாக இணையமே பிரபலமாக பேசப்பட்டு வந்த டிக் டாக் பிரபலம் கல்யாணின் கல்யாணம் தான். முதல் மனைவியின் சம்பதத்துடன் இரண்டாவது திருமணம் செய்து நிகழ்வு திருப்பதியில் அரங்கேறியது. 

திருப்பதியில் தக்கலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாணம். டிக்டாக்கில் பிரபலமான கல்யாண் அதே டிக்டாக்கில் நித்யஸ்ரீ என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. சில மாதங்களில் காதலித்தவர்கள் பின்னர் ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்துள்ளனர். காதல் தோல்வி சோகத்தில் சுற்றி திரிந்திருந்த கல்யாணுக்கு மீண்டும் அதே டிக்டாக்கில் விமலா என்ற பெண்ணுடன் மீண்டும் காதல் மலர்ந்துள்ளது.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் கல்யாண் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் நித்யஸ்ரீ. விமலாவை தனியே சந்தித்து தங்களின் தெய்வீக காதலை பற்றி அவரிடம் எடுத்துரைத்துள்ளார். 

எனக்கும் கல்யாணுக்கும் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என விமலாவிடம் கெஞ்சி கூத்தாடியுள்ளார். இந்த விஷயம் பெரியதாகி ஊர் பொதுமக்களின் காதுகளுக்கு எட்டியுள்ளது. அவர்கள் விசாரித்ததில் விமலாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது தெரிய வந்தது. பின்னர் ஊராரின் தீர்ப்புப்படி விமலாவே முன்னின்று நித்யஸ்ரீக்கும் கல்யாணுக்கும் திருமணம் செய்து வைத்தார். 

முன்னாள் காதலியை தன் கணவனுக்கு திருமணம் செய்து வைத்த விமலாவின் இச்செயல் இணையதளத்தில் பேசு பொருளானது. இது போல் ஒரு மனைவி இல்லையே என நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தை மீம்ஸ்களால் தெறிக்க விட்டனர். 

ஒரு கல்யாணத்துக்கே வழியில்லாத 90ஸ் கிட்ஸ்கள் தங்களது வயிற்றெரிச்சலை கொட்டி தீர்த்தனர். இந்நிலையில் திருமணம் ஆன முதல் நாளிலிருந்தே தன்னோடு தான் இருக்க வேண்டும் என இரு மனைவிகளும் கல்யாணை டார்ச்சர் செய்துள்ளனர். ஒரு வாரம் காலமாக தாக்குப் பிடித்த கல்யாண் வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லி இருவருக்கும் டாட்டா காட்டிவிட்டு தலை மறைவாக உள்ளார். இருவர் வீட்டுக்கும் செல்லாமல் தலைமறைவாக உள்ள கல்யாணை விமலாவும் நித்யஸ்ரீயும் வலை வீசி தேடி வருகின்றனர். 

இணையத்தில் 90ஸ் கிட்ஸ் களின் கண்ணில் பட்ட எதுவும் நிலைத்திருப்பது இல்லை என்பதற்கு மேலும் ஒரு சான்றாக கல்யானின் கல்யாணம் அமைந்துவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalyan married life turned into chaos in a week


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->