பிரதமர் மோடி மீதான நம்பிக்கையின் வெற்றி - கங்கனா ரணாவத்
kangana ranawat on her victory
மக்களவை தேர்தல் 2024லில் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் பஜக வேட்பாளராக களம் இறங்கிய கங்கனா ரணாவத் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். பாலிவுட் நட்சத்திரமாக கலக்கி கொண்டு இருந்த அவர் தற்போது அரசியல் வாதியாக மாறி உள்ளார். தனது முதல் வெற்றியை தனது X பக்கத்தில் பதிவிட்டார். தனது வெற்றியை ‘பிரதமர் நரேந்திர மோடி மீதான நம்பிக்கையின் வெற்றி’ என்று கூறியுள்ளார்.
X தளத்தில் பிரதமர் மோடி உடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்த கங்கனா ரணாவத் “இந்த ஆதரவுக்கும், இந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் மாண்டிவாசிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள், இந்த வெற்றி உங்கள் அனைவருக்கும், இது பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான நம்பிக்கையின் வெற்றி, இதுவே. சனாதனத்தின் வெற்றி, இது மாண்டியின் பெருமைக்குக் கிடைத்த வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.
தன் சொந்த மாநிலமான ஹிமாச்சல் பிரதேஷத்தில் உள்ள மண்டி தொகுதியில் பஜக வேட்பாளராக காங்கிரஸின் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து கங்கனா போட்டியிட்டார். கங்கனா ரணாவத்
524079 வாக்குகள் பெற்றதாக ஜூன் 4 ஆம் தேதி செவ்வாய்கிழமை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
“மகள்களுக்கான அவமானங்களுக்கு மண்டி தயவு காட்டவில்லை. மும்பைக்கு நான் புறப்படுவதைப் பொறுத்த வரையில், இது (இமாச்சலப் பிரதேசம்) எனது ‘ஜென்மபூமி’, நான் இங்கு மக்களுக்கு சேவை செய்வதைத் தொடர்வேன். அதனால், நான் எங்கும் செல்லவில்லை. ஒருவேளை, வேறு யாராவது தங்கள் பைகளை மூட்டை கட்டிக்கொண்டு வெளியேற வேண்டியிருக்கும். நான் எங்கும் போவதில்லை” என்று கங்கனா ரணாவத் கூறினார்.
இதன் பிறகு தானே டைரக்ட் செய்து நடித்த "Emergency" படம் வெளியாக உள்ளது. இத்திரை படம் இந்திரா காந்தி தலைமையில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரை படமாகும்.
English Summary
kangana ranawat on her victory