காவிரி விவகாரம் || நடிகர் சித்தார்த்தை சுத்து போட்ட கன்னட அமைப்பினர்! வைரலாகும் வீடியோ!
Kannadaians besieged actor Siddharth over the Cauvery issue
கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என காவேரி ஒழுங்காற்று குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் வீதம் நீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாளை கர்நாடகாவில் முழு பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இரு மாநிலங்கள் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் தமிழக கர்நாடக எல்லை வரை மட்டுமே இன்று இயக்கப்பட்டன.
இந்த நிலையில் சிந்துபாத், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்து வெளியாகி உள்ள சித்தா திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பு கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் காவிரி விவகாரம் தீவிரமாகியிருக்கும் நிலையில் தமிழ் நடிகர்களின் நிகழ்ச்சி எதற்கு, இதெல்லாம் தேவையா என்று கோஷமிட்டனர். இதனால் நடிகர் சித்தார்த் தனது நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பாதியில் வெளியேறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
English Summary
Kannadaians besieged actor Siddharth over the Cauvery issue