டியூஷன் சென்டரில் மாணவிக்கு நடந்த கொடுமை! தலைமறைவாக இருந்த ஆசிரியரை தட்டி தூக்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


காரைக்கால், நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 43) இவர் நெடுங்காடு பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

இவர் அப்பகுதியிலேயே தனது மனைவியுடன் சேர்ந்து டியூஷன் சென்டர் நடத்தி வந்தார். இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் 17 வயது பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கணேஷ்குமார் நடத்தும் டியூஷன் சென்டரில் படித்து வந்தார். 

கடந்த சில வாரங்களில் முன்பு கணேஷ்குமார் மாணவியுடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக நெடுங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கணேஷ்குமாரை தேடி வந்தனர். 

மேலும் அவர் பயன்படுத்தி வரும் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி கணேஷ்குமார் கும்பகோணத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. 

இதனை அடுத்து நெடுங்காடு போலீசார் கும்பகோணத்திற்கு விரைந்து சென்று ஆசிரியர் கணேஷ்குமார் அதிரடியாக கைது சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karaikal student sexually harassed absconding teacher arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->