காவிரி விவகாரம் || ஒக்கூட்டா விடுத்த அழைப்பு! ஸ்தம்பித்து போன தலைநகர்! கர்நாடகாவில் என்ன தான் நடக்குது? - Seithipunal
Seithipunal


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கன்னட ஒக்கூட்டா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பெங்களூரு மற்றும் மாநிலத்தின் தென் பகுதிகளில் முழு ஆதரவு வழங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகர்ப்புறம், மாண்டியா, மைசூர், சாமராஜநகர், ராமநகர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் அதிகாரிகள் தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள மாண்டியா போன்ற காவிரிப் படுகை மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

கர்நாடக அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழக பேருந்துகள் அசாதாரண சூழல் நிலவி வருவதால் கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் மிகக் குறைவான அளவில் இயக்கப்படுகிறது. மாநிலத்தின் பிற பகுதிகளில் பந்திருக்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்துள்ளது. சித்ரதுர்கா மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உருவப் படத்தை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.

இந்த பந்த்க்கு கன்னட திரையுலகினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடகா திரைப்படக் கண்காட்சியாளர்கள் சங்கம் பந்த் ஆதரவுடன் மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மாலை வரை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

பெங்களூருவில் உள்ள முக்கிய மார்க்கெட் பகுதிகளான சிக்பேட், பாலேபேட்டை மற்றும் அதை ஒட்டிய வணிக பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் ஓலா, உபேர், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்களும் பந்த்க்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் கர்நாடக மாநிலமே ஸ்தம்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka bandh over cauvery issue disrupts normal life in Bengaluru


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->