#BREAKING: திடீர் திருப்பம் - சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் முதல்வரை கைது செய்ய தடை! - Seithipunal
Seithipunal


போக்ஸ்சா வழக்கில் முன் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கர்நாடகாவில் 17 வயது மைனர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

மேலும், அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிஐடி பிரிவினர் விசாரித்து வந்தம் நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத எடியூரப்பாவைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்குமாறு பெங்களூரு முதலாம் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் எடுப்பாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் நிலையில், தற்போது அதற்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்ஸ்சா வழக்கில் முன் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கை இன்று விசாரணை செய்த கர்நாடக உயர்நீதிமன்றம் தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த முன் ஜாமீன் வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka BJP Former CM Yediyurappa Struck On Harassment Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->