வாட்ஸ்அப் வீடியோ காலை பார்த்து பதறி அடித்து ஓடிய பாஜக எம்.எல்.ஏ.! அப்படி என்னதான் நடந்திருக்கும்?.. - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக எம்.எல்.ஏ. திப்பாரெட்டி. இவருக்கு கடந்த மாதம் 31ம் தேதி முன் அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். 

அந்த காலை திப்பாரெட்டி ஆன் செய்தபோது, அந்த பெண் தனது ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கி உள்ளார். இதனால் பதறிய திப்பாரெட்டி, இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பின்னர் அந்த பெண், திப்பாரெட்டிக்கு ஆபாசமான வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். 

இதையடுத்து பாஜக எம்.எல்.ஏ திப்பாரெட்டி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, "தன்னிடம் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, செய்தியாளர்களை சந்தித்த திப்பாரெட்டி தெரிவித்ததாவது, 'எனக்கு முதலில் அழைப்பு வந்தபோது, நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அழைப்பு வந்தது.

அப்போது அந்த பெண் திடீரென தன் ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்தார். உடனே போனை எனது மனைவியிடம் கொடுத்தேன். எனது மனைவி அந்த இணைப்பை துண்டித்து அந்த நம்பரை பிளாக் செய்தார். அதன்பிறகு, காவல்துறை ஆய்வாளரின் ஆலோசனையின் படி, காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தேன்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka bjp MLA tippareddy pettition on woman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->