ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம்! முதலமைச்சர் சித்தராமையா பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பெரிய சதி நடப்பதாக, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். 

முடா முறைகேடு வழக்கில், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா தெரிவிக்கையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசை கவிழ்க்க ஒரு பெரிய சதி திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 

ஏற்கனவே டெல்லி, ஜாக்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் இது போன்ற ஒரு சதி திட்டத்தை செய்துள்ளனர். அதேபோல கர்நாடக மாநிலத்திலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டுப்பட்டுள்ளது. 

இந்த சதி திட்டத்தில் மத்திய அரசும், பாஜக மற்றும் ஜேடிஎஸ் (குமாரசாமி கட்சி) உள்ளிட்ட கட்சிகளும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் தலைமை தற்போது வரை என்னுடன் தான் உள்ளது. 

முழு அமைச்சரவையும், இந்த அரசாங்கமும் எனக்கு பக்க பலமாக உள்ளது. மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக, என்னுடன் துணை நிற்கிறார்கள். 

நான் இந்த விவகாரத்தில் தவறு செய்யவில்லை. எனவே நான் ராஜினமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்று சித்தராமையா தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka CM Congress vs BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->