2025- ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று; கவர்னர் உரையாற்றுகிறார்..!
The assembly session is meeting today
2025 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவார் என்றும், மற்ற விவாதங்கள் ஏதும் இன்றைய கூட்டத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
2025-ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 06-ஆம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு முன்னர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கவர்னர் உரையாற்றுவதற்கான அரசின் கொள்கை சார்ந்த குறிப்புகள் ஏற்கனவே கவர்னரிடம் வழங்கப்பட்டதாகவும், கவர்னர் உரையாற்ற முறைப்படி சபாநாயகர் அவருக்கு நேரில் சென்று அழைப்பு விடுப்பு உள்ளார்.

அரசு தயாரித்த குறித்த உரையில், தமிழக அரசின் செயல்பாடுகள், சாதனை விவரங்கள் மற்றும் கொள்கை சார்ந்த முடிவுகள் ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, கவர்னர் , அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல், முதல் பக்கத்தையும் கடைசி பக்கத்தையும் மட்டும் வாசித்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அவர் இந்த ஆண்டு முழுமையாக உரையை வாசிப்பாரா என்பது இன்றைய கூட்டத்த்தில் தெரிய வரும்.
இன்று சட்டசபை கூட்டம் கூடுகிறது; கவர்னர் உரையாற்றுகிறார்..!
English Summary
The assembly session is meeting today