மாணவிகளிடம் கருப்பு துப்பட்டா பறிமுதல் செய்தது ஏன்? போலீசார் அறிக்கை..!
Why was the black scarf confiscated from the students
காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் கருப்பு நிற துப்பட்டாவை வாங்கி வைத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாணவிகள் அணிந்திருந்த , கருப்பு நிற துப்பட்டாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது, கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் அதை பாதுகாப்பு பிரிவு போலீசார் வாங்கி வைத்துக் கொண்டு பின்னர் அனுமதித்தனர்.
குறித்த நிகழ்ச்சி முடிந்த பின்னரே கருப்பு நிற துப்பட்டா மற்றும் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது தெரிய வருகிறது. விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்த போலீசார் கருப்பு துப்பட்டா அணிந்து வந்தோரிடம் துப்பட்டாவை வாங்கி வைத்தனர்.
இனி அவ்வாறு நடக்காமல் இருக்க சென்னை போலீஸ் பிரிவுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. என்று அந்த அறிக்கையில் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
English Summary
Why was the black scarf confiscated from the students