"கருணை கொலை செய்து விடுங்கள்." ஜனாதிபதிக்கு பறந்த கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் நாயக் மற்றும் சுஜாதா நாயக் தம்பதிகள் தங்களது சொந்த நிலத்தில் கட்டிட வேலை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டி விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இந்த அனுமதி கொடுப்பதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக தெரிய வருகிறது. 

இதனால் அந்த தம்பதிகள் மனவேதனையில் உதவி ஆணையரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், அவர்கள் "நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்களது நிலம் குறித்த ஆவணங்களை சரி பார்க்க பஞ்சாயத்து வளர்ச்சி துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். எங்களை பிச்சைக்காரர்கள் போல அவர்கள் நடத்துகின்றனர். 

சாவதை தவிர எந்த வழியும் இல்லை. எங்கள் நிலம் குறித்த பத்திர வேலைகளுக்கு லஞ்சம் கொடுக்கச் சொல்லி துன்புறுத்துகின்றனர். எனவே, எங்கள் நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொண்டு எங்களை கருணை கொலை செய்து விடட்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவை காவல் உதவி ஆணையர் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். இந்த மனு குறித்து உயர் அதிகாரி ஒருவர், "இந்த மனு மீதான உண்மை தன்மை ஆராயப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்று உறுதி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka couples sadly request to draupathi murmu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->