தந்தைக்கு பெரியம்மாவை கட்டி வைத்த மகள்கள்.. நெகிழவைக்கும் சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் டி.கே.வாசன் என்பவர் பாஜக ஆதரவாளராகவும், மேலும் இவர் கடந்த 2018 இல் ஹூப்ளி நகர் மேயராகவும் இருந்திருக்கிறார். இவருக்கு சாரதா பாய் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி நான்கு மகள்கள் இருந்தனர். அந்த மகள்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.

மருமகன்கள், பேரக்குழந்தைகள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் மனைவி சாரதா தனது 63 வயதில் மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். எனவே, தந்தைக்கு மறுமணம் செய்து வைக்க மகள்கள் முடிவு செய்தனர். ஆனால், இதற்கு டிகே வாசன் ஒப்புக்கொள்ளவில்லை. 

பின்னர் சொந்தக்காரர்களை அழைத்து அவரிடம் பேசி சம்மதம் வாங்கினார்கள். இதனை தொடர்ந்து அவர்களது தாயின் பெரிய அக்கா இது நாள் வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார். அவரையே தங்களுக்கு தாயாக நினைத்து மகள்கள் அவரிடம் பேசி சம்மதிக்க வைத்து தங்களது தந்தைக்கும் பெரியம்மாவுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

நெருங்கிய நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு இந்த திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி முடித்தனர். தாய் இறந்த மூன்று மாதத்தில் தங்களது தந்தைக்கு திருமணம் செய்து வைத்து அந்த மகள்கள் அழகு பார்த்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka men married wife sister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->