முடிகெரேவில் போராட்டம்... "பரபரப்பில் கர்நாடக அரசியல்".! பாஜகவில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பலருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல பாஜக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் ஹூப்ளி தர்வாத் தொகுதியில் ஆறு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஜெகதீஷ் ஷட்டர் பெயர் இரண்டாவது பட்டியலிலும் இடம்பெறவில்லை. இதனால் அவர் பாஜகவில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முடிகெரே தொகுதி பாஜக எம்எல்ஏவும் எடியூரப்பாவின் ஆதரவாளருமான எம்.பி குமாரசாமிக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இந்த முறை முடிகெரே தொகுதியில் அவருக்கு பதிலாக தீபக் டோடியா என்பவர் பாஜக சார்பில் போட்டியிட உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் குமாரசாமி மீதான 8 காசோலை பவுன்ஸ் வழக்குகள் மற்றும் அவர் சர்ச்சையில் சிக்கியதே இம்முறை அவரை களமிறக்கக் கூடாது என்ற கட்சியின் முடிவின் பின்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குமாரசாமிக்கு மீண்டும் கட்சி சீட்டு வழங்காததை கண்டித்து முடிகெரேவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka MLA MP Kumaraswamy quit from bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->