போலீசாரை தாக்க முயன்ற ரவுடி! துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிவிட முயன்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மாவவல்லி தாலுகா சிக்முலகுடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீட்டர் முத்துராஜ் என்கிற டக்கா. இவர் மீது மூன்று கொலைகள் மூன்று கொலை முயற்சி இரண்டு கொள்ளை வழக்குகள் உட்பட 11 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு வழக்குகளில் சிக்காமல் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரை கைது செய்த ஹலகுரு பகுதியைச் சேர்ந்த ஆய்வாளர் ஸ்ரீதர் என்பவர் கைது செய்துள்ளார். அப்போது ரவுடி ஷீட்டர் முத்துராஜ் போலீசாரை துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்ட் சுட்டு சரணடையுமாறு எச்சரித்துள்ளனர்.

ஆனால் ரவுடி  சரணடையாமல் போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
 இதனால் போலீசார் தற்காப்புக்காக  ரவுடி மீது காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் துப்பாக்கிச் சூட்டில் குண்டு காயம் அடைந்த அவரை மாண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஹலகுரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பிரபல ரவுடியை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தபோது ரவுடி போலீசை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka state the police opened fire on the raider who tried to escape after attacking the police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->