கர்நாடகா | அதிகாலை குலுங்கிய வீடுகள்: அச்சத்தில் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்!
Karnataka sudden earthquake
கர்நாடகா, விஜயபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டரில் இன்று காலை 6.52 மணி அளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.
பொதுமக்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென நில அதிர்வு ஏற்பட்டு வீடுகள் குலுங்கியாதால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நில அதிர்வு சுற்றுவட்டாரத்தில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு காரணமாக வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து சிதறியது.
இதன் காரணமாக கர்நாடகா, விஜயபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் பொதுமக்கள் நில அதிர்வு ஏற்பட்டதால் வீடுகளுக்குள் செல்லாமல் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து நில அதிர்வு ஏற்படுமா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
English Summary
Karnataka sudden earthquake