கர்நாடக பெண் விவசாயி தற்கொலை: நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு!
Karnataka woman farmer commits suicide financial institution against Case
கர்நாடகா, சிக்கமங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாய ஒருவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறிய நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்ற கடனுக்காக நிறுவன ஊழியர்கள் தொல்லை கொடுத்ததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.
சிக்கமங்களூர் தங்கலி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவிரம்மா (வயது 64) இவர் ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ. 78 ஆயிரம் கடன் பெற்ற நிலையில் விவசாயம் பாதித்ததால் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து கடனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த தேவிரம்மா தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவிரம்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Karnataka woman farmer commits suicide financial institution against Case