கொட்டிதீர்க்கும் கனமழை: கேரளாவில் 14 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். திருவனந்தபுரம் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் மேலும் சில நாட்கள் கனமழை நீட்டிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் கேரளாவில் 14 மாவட்டங்களில் இன்று முதல் புதன்கிழமை வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டையம், இடுக்கி போன்ற மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுத்தும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்காயும் திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala 14 districts heavy rain warning


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->