அதிமுகவிற்கு வேலை இல்லாததால் பயம் வந்து விட்டது!...ஜெயக்குமாருக்கு கனிமொழி பதிலடி!
Aiadmk is afraid of lack of work kanimozhi reply to jayakumar
அதிமுகவுக்கு எந்த வேலையும் இல்லாததால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எல்லோருக்கும் ஆறுதல் சொல்ல தொடங்கி விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மதுரவாயலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தி.மு.க. ஆட்சியில் தினமும் கொலை என்ற நிலை மாறி, தற்போது நொடிக்கு நொடி கொலை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவிற்கு வனவாசம் என்று விமர்சித்து பேசினார்.
இந்த நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுகவுக்கு எந்த வேலையும் இல்லாததால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எல்லோருக்கும் ஆறுதல் சொல்ல தொடங்கி விட்டதாகவும், அது பயத்திலிருந்து வரக்கூடிய கருத்துக்கள் என்று தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்காமலும், பிரச்சினைகளை குறித்து ஆய்வு மேற்கொள்ளாமலும் இருப்பது கண்டனத்துக்குரியதாக உள்ளதாகவும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை என்று கூறினார்.
English Summary
Aiadmk is afraid of lack of work kanimozhi reply to jayakumar