ஆசிரியர் இல்லாததால் போராட்டத்தில் களமிறங்கிய மாணவர்கள் - நாமக்கல்லில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொம்மசமுத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த பெருமாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 52 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இன்றி ஒரு ஆசிரியர் மட்டுமே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அந்த ஆசிரியரும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்றதையடுத்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்த பள்ளிக்கு தற்காலிகமாக 2 ஆசிரியர்களை நியமித்து தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். அதிலும் ஒரு ஆசிரியர் கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. 

இதனால், ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தவிப்பதாக கூறி இன்று பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து தகவல் தெரியவந்ததும் நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

students arrested for no teacher at school in namakkal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->