"தி கேரளா ஸ்டோரி".. பிரிவினைவாதத்தை தூண்டும் ட்ரெய்லர்.. முதலமைச்சர் கடும் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியில் சுதித்தோ சென் இயக்கத்தில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் அதா.சர்மா, பிரணவ் மிஸ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதை கேரளாவை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேருவதை போன்ற உண்மை கதைக்களத்தை அமைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது திரைப்படத்தின் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அதன் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் கேரள அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள முதல்வர் பினாராய் விஜயன் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் அவர்களின் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய எடுக்கப்பட்ட படம் இது என்பது ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது.

வகுப்பு பிரிவினைவாத மற்றும் கேரளாவிற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த லவ் ஜிஹாத் குற்றச்சாட்டுகளை வடிவமைத்து திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்ளது. லவ் ஜிஹாத் என்பது ஒன்று கிடையாது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். இப்படி ஒரு சூழ்நிலை கேரளாவில் மத நல்லிணக்கத்தை அழித்து வகுப்பவாத விஷ விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருகிறது" என கேரள முதல்வர் பிரனாய் விஜயன் குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala CM condemned the Kerala Story movie trailer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->