பிபிசி அலுவலகங்களில் ரெய்டு செய்ததில் சந்தேகம்..! - கேரள முதல்வர் பினராய் விஜயன்..!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள பாரகம்பா சாலையில் அமைந்துள்ள பிபிசி நிறுவனத்தின் இந்திய தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11:30 மணி அளவில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து வெளியிடப்பட்ட ஆவணப்படம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இந்த வருமான வரி சோதனை நடைபெற்றது.

நாட்டையே உலுக்கிய குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்திற்கு மத்திய அரசு சமூக வலைதளங்களில் திரையிட தடை விதித்திருந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்த்து திரையிட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைக்கு பலதரப்பட்ட மக்களும் எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "வருமானவரித்துறையினரின் ஆய்வு நடவடிக்கைகள் அந்த நிறுவனத்தின் மீதான நேர்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இது சர்வதேச சமூகத்தின் முன்பு இந்தியாவை சந்தேகப்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான எந்த தவறான நடவடிக்கையும் ஆட்சியபனைக்குரியது" என தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala CM Pinarayi Vijayan condemns income tax raid at BBC offices


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->