குவைத் தீ விபத்து : இறந்தவர்களின் உடலுக்கு கொச்சி விமான நிலையத்தில் கேரள முதல்வர் அஞ்சலி! - Seithipunal
Seithipunal


 

வளைகுடா நாடான குவைத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 7 பேர் தமிழர்கள். இதையடுத்து இந்திய விமானப்படை விமானம் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை கொண்டு வருவதற்க்கு குவைத் புறப்பட்டு சென்றது.

 

இந்நிலையில் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 31 பேரின் உடல்களை இன்று விமானப் படை விமானம் கொச்சி கொண்டு வந்துள்ளது. கொச்சி விமான நிலையத்தில் அந்த 31 பேரின் உடல்களும் வைக்கப் பட்டுள்ளன. முன்னதாக தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் 8 ஆம்புலன்ஸ்களுடன் கொச்சி விமான நிலையம் சென்று காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து விமான நிலைய நடைமுறைகள் அனைத்தும் முடிந்ததும் உயிரிழந்த அனைவரின் உடலும் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அவரகளது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

இந்நிலையி கேரளா முதல்வர் பினராயி விஜயன் மத்திய காமிச்சார் சுரேஷ் கோபி மற்றும் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான், மற்றும் பல உயர் அதிகாரிகள் அனைவரும் கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

இதையடுத்து உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அவருடன் சென்ற அதிகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து 7 ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala CM Pinarayi Vijayan Paid Tribute to Kuwait Fire Accident Victims in Kochi Airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->