கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி.!
kerala ex chief minister oommen chandy admitted in banglore hospital
கேரள மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. இவர் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து உம்மன் சாண்டிக்கு அவரது குடும்பத்தினர் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று தகவல் வெளியானது. இந்த தகவல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை காங்கிரஸ் சார்பில் அளிக்கப்படும் என்றுத் தெரிவித்தனர்.
இந்நிலையில் உம்மன் சாண்டிக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக பெங்களூருவிற்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன் படி, அவர் நேற்று மாலை தனி விமானத்தின் மூலம் பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை தொடர்பாக உம்மன் சாண்டி தெரிவித்ததாவது, "தனக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து எந்த சர்ச்சையும் வேண்டாம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
kerala ex chief minister oommen chandy admitted in banglore hospital