அய்யப்ப பக்தர்களுக்கு 5 லட்சம் காப்பீடு - கேரளா அரசு அதிரடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எவரேனும் உயிரிழந்தால் அரசு சார்பில் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துச் செல்கின்றனர். 

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26 ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14 அன்றும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கேரளா அரசு சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் எவரேனும் உயிரிழந்தால் அவர்களுக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala government annaounce insurence to ayyappa devotees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->