வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க அவசரச் சட்டம்! ஸ்டாலின் பார்வையும் கேரளா பக்கம்! - Seithipunal
Seithipunal


கேரளா அரசுக்கும் ஆளுநர் ஹாரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரளா மாநிலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து கேரள மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேஸ்வரி நியமனம் சட்டவிரமான என கூறி துணைவேந்த நியமத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

துணைவேந்தர்கள் பதவிக்கு குறைந்தது மூன்று நபரை மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என்ற நிலையில் கேரள மாநில அரசு ஒருவரின் பெயரை மட்டுமே பரிந்துரை செய்தது. இந்த நிலையில் ஒருவர் பெயரை மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட கேரள மாநிலத்திலும் இதர 11 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஹாரிப் முகமது கான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் அந்த நோட்டீஸில் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இதற்கு கேரள மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநர் ஹாரிப் முகமது கானை பதவியிலிருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர பினராய் விஜயன் தலைமையிலான அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளது. எனினும் கேரள சட்டமன்றத்தில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அமலுக்கு வரும். தன்னுடைய பதவியை நீக்கம் செய்ய ஆளுநரை ஒப்புதல் அளிப்பாரா? கேரள அரசின் இத்தகைய செயல் நகைப்பிற்குரிய செயலாகவே பார்க்கப்படுகிறது. எனினும் ஆளுநருக்கு எதிராக மாநில அரசின் எதிர்ப்பை பதிவு செய்யும் செயலாகவே பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். குறிப்பாக பல்கலைக்கழகங்களை துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தற்பொழுது கேரளாவில் ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப் போகும் இந்த தீர்மானம் தமிழகத்திலும் எதிரொலிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசும் உன்னிப்பாக கவனித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala govt remove governor from Chancellor of universities


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->