இந்தியாவில் பொது திருமண சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் வேண்டுகோள்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி மாதம் கேரள மாநிலத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒரு ஆணும் 28 வயதுடைய ஒரு பெண்ணும்  திருமணம் செய்துகொண்டனர். ஆனால், சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

அதன் பின்னர், இருவரும் விவகாரத்து செய்துகொள்ள முடிவு செய்த நிலையில், கடந்த மே மாதம் குடும்ப நீதிமன்றத்தில் ஒன்றாக மனு தாக்கல் செய்தனர். இருவரும் முழு மனதுடன் விவாகரத்திற்கு விண்ணப்பித்த நிலையில், கிறிஸ்தவ மதத்தினருக்கான விவாகரத்து சட்டப்பிரிவு 10 ஏ படி, திருமணமாகி ஒருவருடத்திற்கு பிபிறகு தான் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறி அந்த மனுவை குடும்ப நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 

இதற்கு மறுப்புத் தெரிவித்து இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரணை செய்த கேரள உயர்நீதிமன்றம், இருவரின் சம்மதம் இருந்தாலும் விவாகரத்து பெற ஓராண்டு நிறைவாகி இருக்க வேண்டும் என்ற சட்டத்தை ரத்து செய்தது. 

மேலும், திருமண பிரச்சினையில் தம்பதியின் நலனை மேம்படுத்துவதற்கு இந்தியாவில் பொதுவான திருமண சட்டத்தை கொண்டு வருவதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்' என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மனுதார்கள் மீண்டும் குடும்ப நீதிமன்றத்தை அனுகி விவாகரத்து வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala high court permission granted for new married couples divorce case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->