கேரள மாணவருக்கு அமெரிக்காவில் நேர்ந்த சோகம்! உறவினர்கள் அதிர்ச்சி!
Kerala student tragedy happened America
கேரளா: கோட்டம் மாவட்டத்தில் உள்ள கைப்புழா பகுதியை சேர்ந்தவர் சன்னி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ஜாக்சன்(வயது17), ஜோதி, ஜோசியா, ஜாஸ்மின் ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர்.
சன்னி, தனது மனைவி ராணியுடன் 1992-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். ராணி அமெரிக்கா கலிபோர்னியா நகரில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
அவரது குழந்தைகளும் அங்குள்ள கல்வி நிலையங்களில் படித்து வந்தனர். உறவினர்களை பார்க்க எப்போதாவது கேரளாவுக்கு வந்து செல்வர்.
அது போல் கடைசியாக கேரளாவுக்கு வந்திருந்த நிலையில், சன்னியின் மகன் ஜாக்சன் அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்ப்பட்டார். பின்னர் பெற்றோர்கள் வந்து பார்த்து விசாரணை நடத்திய போது அவரை யார், எதற்காக சுட்டுக்கொன்றார்கள்? என்ற தகவல் தெரியவில்லை.
ஜாக்சன் சுட்டு கொலை செய்யபட்டதும், அமெரிக்காவிலேயே ஜாக்சனின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அவரது தாய் ராணி, கேரளா கைப்புழாவில் உள்ள தனது சகோதரிக்கு செல்போனில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் கேரள மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kerala student tragedy happened America