வாஷிங் மெஷினுக்குள் படமெடுத்த பாம்பு... ! பழுது பார்க்க வந்த டெக்னீஷியனுக்கு ஏற்பட்ட 'திக்' அனுபவம் ..!! - Seithipunal
Seithipunal


வாஷிங் மெஷினை பழுது பார்க்க வந்த டெக்னீஷியன் அதற்குள் படமெடுத்த பாம்பைக் கண்டு உயிர் தப்பியுள்ள சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தளிபரம்பா என்ற பகுதியைச் சேர்ந்த டெக்னீஷியனான ஜனார்த்தனன், கடம்பேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாஷிங் மெஷின் பழுது பார்க்க அழைத்ததால் அங்கு சென்றுள்ளார். அங்கிருந்த வாஷிங் மெஷினுக்குள் தான் ஒரு பெரிய பாம்பு இருந்துள்ளது. 

ஜனார்த்தனன் வாஷிங் மெஷினை இயக்க முற்பட்ட போது, உள்ளுக்குள் எதுவோ சுழல்வதைக் கண்டுள்ளார். மேலும் வாஷிங் மெஷின் துடுப்புகளில் நன்றாக சுற்றி இருந்ததால், அதை ஒரு துணி என்று நினைத்த ஜனார்த்தனன், அதை எடுக்க முனைந்த போது, அது திடீரென படமெடுத்துள்ளது. 

இதையடுத்து உடனடியாக வீட்டு உரிமையாளர்களை அழைத்து வாஷிங் மெஷினுக்குள் பாம்பு உள்ளதை தெரிவித்துள்ளார். அவர்களுக்கும் இது எப்படி வந்தது என்று தெரியவில்லை. இதையடுத்து வீட்டு உரிமையாளரான பிவி பாபு, மலபார் வனவிலங்கு விழிப்புணர்வு மற்றும் மீட்பு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு உடனடியாக வந்த மீட்புக் குழுவினர் பிறந்து 3 வாரங்களே ஆன அந்த நாகப் பாம்பை பத்திரமாக மீட்டுச் சென்றனர். 

வடிகால் குழாய் வழியாக அந்த பாம்பு வாஷிங் மெஷினிற்குள் நுழைந்திருக்கலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வீட்டு உரிமையாளர் பிவி பாபு, " இரண்டு வாரங்களாக வாஷிங் மெஷின் வேலை செய்யவில்லை. நாங்கள் மெஷினை மூடி வைத்திருக்கும்போது எப்படி பாம்பு அதற்குள் வந்தது என்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala Technician Escapes From Snakebite Which is Lurking in Washing Machine


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->