#கேரளா:: ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த சம்பவம்.. குற்றவாளி ஷாருக் சைபி அதிரடி கைது..!!
Kerala train fire incident case accused shahrukh saipi arrested
கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து கண்ணூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2ம் தேதி இரவு கோழிக்கோடு ரயில் நிலையத்தில் நின்று சென்றது. ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரயிலில் டி1 கோச்சில் சக பயணி மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தீப்பற்றக் கூட எண்ணெயை ஊற்றி பற்ற வைத்துள்ளார். அந்த சம்பவத்தில் குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் அடையாளம் காணப்பட்டனர். இருப்பினும் போலீசார் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்குமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இந்த தீ வைப்பு சம்பவம் நடைபெற்ற ரயிலில் இருந்து இரண்டு செல்போன்கள், ஒரு பை மற்றும் பெட்ரோல் பாட்டில் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரயில் கோரப்புலா ரயில்நிலையத்தில் நின்றவுடன் ஒருவர் ரயிலில் குதித்து அவருக்காக காத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றுள்ளான்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியின் மாதிரி உருவ படத்தை வெளியிட்டு இருந்தனர்.
மேலும் ரயிலிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு செல்போன்களின் பதிவு எண்ணை வைத்து உத்திரபிரதேசத்தில் ஒருவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் தீ வைப்பு சம்பவத்திற்கு தொடர்பில்லை என்பதால் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான ஷாருக் சைபி என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் ரத்தின கிரி பகுதியில் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஷாருக் சைபி மகாராஷ்டிரா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
English Summary
Kerala train fire incident case accused shahrukh saipi arrested